மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது போலீசார் அதிரடி

மதுரை மீனாட்சி நகர் ஈபி ஆபீஸ் அருகே கஞ்சா விற்பனை செய்த கீழ் மதுரையைச் சேர்ந்த சூர்யா 19 என்ற வாலிபரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் தல்லாகுளம் போலீசார் நரிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகவேல் மணி 22 என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் செல்லூர் போலீசார் தத்தனேரி மெயின் ரோடு எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த அன்பு முத்து 59 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் செல்லூர் போலீசார் அகிம்சாபுரம் மூன்றாவது தெருவில் நடத்திய சோதனையில் நாகேந்திர கார்த்திக் 29 இவரை கைது செய்து அவரிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் கூடல்புதூர் போலீசார் குலமங்கலம் அய்யனார் கோவில் பின்புறமாக கஞ்சா விற்பனை செய்த கூடல் நகரைச் சேர்ந்த அஜித்திரன் 20 இவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை அருகே சிலைமான் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சக்கிமங்கலம் பாலத்தின் அடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகாபிரபு 23 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆயிரத்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் கீழவளவு போலீசார் சுடுகாட்டு காளி கோவில் அருகே விற்பனை செய்து கொண்டிருந்த சல்மான்கான் 25 என்பவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் அலங்க நல்லூர் போலீசார் பெரிய ஊர் சேரி சுடுகாடு அருகே விற்பனை செய்த செல்வம் 50 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூபாய் 2900ஐயும் பறிமுதல் செய்து கைது செய்தனர்.சேடபட்டி போலீசார் அயோத்திபட்டி சந்திப்பில் விற்பனை செய்த பிரதீப் 29 என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.செய்தியாளர் வி காளமேகம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image