மதுரை மாநகரை குற்றமில்லா மாநகரமாக மாற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து வாகனங்களில் வலம்..

.மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களை இன்று 27.11.2020- ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரௌடிகளின் நடமாட்டம் உள்ள மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக ரோந்துபணியில் ஈடுபட்டு தொடர்ந்து கண்காணிப்பார்கள். ரௌடிகளின் நடவடிக்கைகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் தாமதமின்றி சம்மந்தப்பட்ட இடங்களுக்கு உடனே சென்று அவர்களை உடனடியாக பிடிப்பதற்காகவும் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான முறையில் ஆயுதப்பிரயோகம் செய்வதற்காகவும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை மொத்தம் 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் மதுரை மாநகரில் உள்ள ரௌடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கும், மற்றும் பொதுமக்களை பாதுகாத்திடவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image