மதுரை அருகே செக்கானூரணியில் குற்றப்பத்திரிகையில் பெயர் நீக்குவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து .இவரது அருகிலுள்ள வீட்டை சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கும் இவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது .இதில் முத்துவுக்கும் அவரது மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனடிப்படையில் முத்து செக்கானூரணி காவல்நிலையத்தில் கடந்த 30 9 2017 அன்று நல்லதம்பி உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்ல தம்பியை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத தனது மகன்கள் மாரி, கண்ணன், பேரன் கமல் இவர்களது பெயரை குற்றப் பத்திரிக்கையில் இருந்து நீக்குமாறு நல்லதம்பி இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்களது பெயரை நீக்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் அனிதா கேட்டார் .அதற்கு நல்ல தம்பி 80 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார் .மேலும் முதல்கட்டமாக 30 ஆயிரம் தருவதாகவும் கூறினார். இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் ரசாயனம் தடவிய 30 ஆயிரத்தை நல்ல தம்பி இடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் அனிதாவை கையும் களவுமாக கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்க காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image