மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மதுரையில் சாலை மறியல், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது.

கொரைனா ஊரடங்கால் வேலை இழந்த குடும்பங்களுக்கு 7,500 நிவாரணம் வழங்க வேண்டும், நூறு நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மதுரை கட்டபொம்மன் சிலை சந்திப்பில் இருந்து இரயில் நிலைய சந்திப்பு வரை நடைபெற்ற பேரணியில் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தொழில் சங்கங்களின் சார்பில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள், பேரணியை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார், பின்னர் பேரணி சாலை மறியலாக நடைபெற்றது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர், போராட்டத்தால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image