Home செய்திகள் நல்லொழுக்க பயிற்சி முகாமை தவறாக சித்தரிப்புபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

நல்லொழுக்க பயிற்சி முகாமை தவறாக சித்தரிப்புபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

by mohan

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஜெ முகம்மது ரசின் தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (25.11.2020) இராமநாதபுரம் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முகம்மது ரசின் கூறியதாவது. பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாமை தவறாக சித்தரிக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம். பொய்யாக புனையப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கைபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நல்லொழுக்க பயிற்சி முகாம்களையும் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் இளைஞர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்தோடு முகாமில் கலந்து கொண்டார்கள்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு சரியாக ஒரு மணி அளவில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு கார்த்திக் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலான 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முகாம் நடைபெற்ற அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கே தங்கியிருந்த இளைஞர்களை மிரட்டும் தோணியில் நடந்துள்ளனர். மேலும் முகாம் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பு எங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டதால் தான் நாங்கள் இங்கே வந்தோம் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்றைய தினம் பத்திரிகைகளில் பெரியபட்டினதில் பயிற்சி முகாம் நடந்ததாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகளை காவல்துறையினரே கொடுத்துள்ளனர். வழக்கமாக நடைபெறக்கூடிய ஒரு பயிற்சி முகாமில் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் பொய்யான வழக்குகளை பதிவு செய்வது காவல்துறையில் புரையோடிப்போயுள்ள இஸ்லாமிய வெறுப்பையே காட்டுகிறது. எங்கள் இளைஞர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி நடத்துவது குற்றமா?மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களை பார்த்திபனூர், பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள காவல்துறையினர் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். இது காவல்துறையின் அத்துமீறல்களை காட்டுகிறது.நாங்கள் காவல்துறைக்கு சில கேள்விகளை முன் வைக்கின்றோம். ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் பல்வேறு பயிற்சி முகாம்களை இதே மாவட்டத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் முகாம்களில் நுழைந்து விசாரணை செய்யும் தைரியம் காவல்துறைக்கு உண்டா? அவர்கள் நடத்தும் முகாம்கள் காவல்துறைக்கு தெரியவில்லை எனில் எங்கு முகாம்கள் நடைபெறுகிறது என்பதை நாங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம், அந்த முகாம்களில் காவல்துறையினர் நுழைந்து விசாரணை நடத்துவார்களா? மற்றொன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களை காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை செய்யும் காவல்துறை தடையை மீறி வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜக உட்பட அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்துவார்களா? என்ற கேள்வியை நாங்கள் காவல்துறைக்கு முன்வைக்கின்றோம்?சமூக இடைவெளி, முகக் கவசம் உட்பட அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு அரசு அனுமதித்த எண்ணிக்கைக்கும் மிகக்குறைவான நபர்களே இந்த முகாமில் கலந்து கொண்ட நிலையில் வழக்குப் பதிவு செய்வது என்பது எவ்வாறு சரியாக இருக்க முடியும். பாரபட்சம் இல்லாத காவல்துறையாக இருக்க வேண்டிய இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை முஸ்லிம் வெறுப்போடு செயல்படும் இந்த தன்மையை மாற்ற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த முகாமில் அத்துமீறி நுழைந்த காவல்துறையை கண்டிப்பதோடு பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாவட்ட தலைவர் முகமது மன்சூர், மாவட்ட செயலாளர் S M இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!