
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் அருகே கடந்த 2015ஆம் ஆண்டு நண்பனை அடித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசி சென்ற அவர் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் அடுத்த ஆத்தி குப்பம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடைய மகன் லோகு என்பவரும் ஒண்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சீனு என்கிற சீனிவாசன் ஆகியோர் நண்பர்கள் இந்நிலையில் லோகு மற்றும் சீனிவாசனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கடந்து 2015ஆம் ஆண்டு லோகு- சீனிவாசனை தாக்கி கொலை செய்து கோபால் என்பவருடைய நிலத்தில் கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார் வேப்பங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பங்குப்பம் காவல்துறையினர் கிணற்றில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர் இந்நிலையில் இன்று கடந்த 2015ஆம் ஆண்டு சீனிவாசன் என்பவரை கொலை செய்துவிட்டதாக நாகப்பட்டினம் மாவட்டம் வள்ளி பாளையம் காவல் நிலையத்தில் லோகு சரணடைந்துள்ளார்