
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உரப்பனூர் கண்மாயில் பைக்கில் சென்ற வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்து திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உரப்பனூர் கண்மாய் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்ற பிரகாஷ் என்பவரை வழிமறித்து சரமாரியாக குத்தி கொன்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.கொலை செய்ததாக ரமேஷ்பாபு, சுகுமார், முத்துராஜா, உதயசூரியன், ஜெயந்தன், அலெக்ஸ் குமார் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.மாஜிஸ்திரேட் பாரதி குற்றவாளிகள் ஏழு பேரையும் டிசம்பர் 7ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு அவர்களை மேலூர் சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்