கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் விளையாட்டு ஆலோசனை குழு தேர்வு….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லை எனும் பெருங்குறையை நீக்கும் வண்ணம் முதல் படியாக கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லிம் சங்கம் நிர்வாகித்துவரும் ஹமீதியா பள்ளி மைதானத்தை, கீழக்கரை இளைஞர்கள் விளையாட அனுமதி அளித்துள்ளது.  அதன்படி மாலை 4.30 To 7.00 மணி வரையும், மேலும் சில வரைமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கூட்டம் கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வடக்கு தெரு கொந்தகருணை அப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இன்ஜினியர் கபீர் தலைமையில  6 பேர் கொண்ட ஆலோசனை குழு ஏற்படுத்தப்பட்டது. கூட்டம் முடிவில் UHMS சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது.

மேலும் விளையாட்டு மைதானத்தில் விளையாட கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

1. விளையாட்டு மைதானத்திற்கு மதில் மீது ஏறி உள்ளே செல்லக்கூடாது
2. மைதானதிற்குள் கண்டிப்பாக யாரும் புகை பிடிப்பது,  மது அருந்துதல்,  தகாத வார்த்தைகள் உபயோகிப்பது கூடாது.
3. விளையாட்டு மைதானத்தில் மாலை 4 மணிமுதல் 7 மணி வரை மட்டுமே அனுமதி.
4. சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பணம் வைத்து விளையாட கூடாது,
5. சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் ஒழுக்கத்தை பேணவேண்டும்
6. கால் பந்து விளையாடாத சமயத்தில் கிரிக்கெட் விளையாடி கொள்ள அனுமதி.
7. மைதானதிற்குள் இருக்கும் உபகரணங்கள், மற்றும் அனைத்து பொருள்களுக்கும் எந்த பங்கமும் விளைவிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
8. விளையாட விருப்பம் உடையவர்கள் தங்கள் முழு விபரத்தை கமிட்டியிடம் கொடுத்து முன் அனுமதி பெற வேண்டும்.
9. மைதானதிற்குள் போட்டிகள்  ( Tournaments) ஏற்பாடு செய்வதாக இருப்பின் முன் அனுமதி பெறுதல் அவசியம்.
10.மைதானத்தில் பிளாஸ்டிக் உபயோகம் செய்வது கூடாது.
11. வடக்கு நுழைவாயிலை மட்டும் பயன்படுத்திக்கொள்வது.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image