
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் 2வது நாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடல் தொழில் மற்றும் நம்பி வாழும் கீழக்கரை பகுதி மீனவர்களுக்கு இது போன்ற பேரிடர் காலங்களில் உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கீழக்கரை பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு