
மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழிச்சாலையில் கோவையிலிருந்து சிவகாசிக்கு சிறிய ரக சரக்கு வேனில் தக்காளி ஏற்றிச்சென்ற போது , கப்பலூர் நான்குவழிச் சாலையில் சுங்கச்சாவடி அருகே உள்ள பாலத்தை மினி சரக்கு வேன் கடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விமான நிலையத்திலிருந்து தனக்கன்குளம் பகுதியை நோக்கி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவர் திடீரென வலது புறம் திரும்பி உள்ளார்.இதனால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் மீது குட்டியானை வாகனம் ஒருபக்கமாக கவிழ்ந்தது.இதனால் இருசக்கர வாகன ஒட்டிய நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்துதிருமங்கலம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்