உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி..

தூத்துக்குடி கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (34) இவர் இந்திய ராணுவத்தில் 14ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பணி நிமித்தமாக லடாக் கிளேசியா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது. ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை குருப் கமான்டன்டர் கர்னல் ரவிக்குமார், டிஎஸ்பி வினோதனி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. கருப்பசாமிக்கு திருமணம் ஆகி தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) என்ற 2 மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற ஒன்னரை வயதுதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply