நிலக்கோட்டையில் காரில் தப்பி வந்த கொலையாளிகளை சுற்றி வளைத்த போலீஸ் படை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திம்மராசநாயக்கனூர் உள்ளது. அங்கு மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழுத்து அறுக்கப்பட்டு பின்பகுதி கத்தி சொருகிய நிலையில் ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்தது கிடந்தது குறித்து தேனி மாவட்ட ஆண்டிபட்டி போலீசார் தகவல் கிடைத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது இறந்த நபர் மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த நாகு என்ற நாகேந்திரன் வயது 50 என்பது தெரியவந்தது. ரியல் எஸ்டேட் பைனான்ஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது இவரை மர்ம நபர்கள் கடந்த 19 . 11. 2020 ஆம் தேதி வீட்டில் இருந்தவரை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று கொலை செய்து சாலையோரத்தில் வீசி சென்று விட்டனர். இந்தக் கொலையாளிகளை நான் தேனி மாவட்ட ஆண்டிபட்டி போலீசார் வலைவீசித் தேடியபோது திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த இரகசிய தகவலை அடுத்து ஒரு காரில் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவுப்படி கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடியில் குறிப்பிட்ட நம்பர் உள்ளவா காரை போலீசார் மரித்த போது போலீசார் மீது மோதுவது போன்று பாவனை செய்து காரிலிருந்து அம்மையநாயக்கனூர் விட்டு தப்பி வந்தனர். இத்தகவல் உடனடியாக நிலக்கோட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி சினிமா பாணியில் நிலக்கோட்டை நால்ரோடு சோதனைச்சாவடி முன்பு நின்றுகொண்டிருந்தனர். சினிமா பட பாணியில் நிலக்கோட்டை பஸ் நிலையத்தை விட்டு கடக்க முயன்ற அறிந்த போலீசார் நாலாபுறமும் வளைத்து வாகனங்களை வைத்து கரை மறித்து மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓட முயன்றபோது போலீசார் பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணை செய்தபோது உசிலம்பட்டியை சேர்ந்த சாய் பிரதாப் வயது 45, உமாசங்கர் வயது 42 ,சுரேஷ் பாண்டி வயது 40, இவர்கள் ஆண்டிபட்டியில் நடந்த பைனான்சியர் 4 என்ற நாகேந்திரன் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகளாக இருப்பார்கள் என சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டு போலீசார் 3 பேரையும் வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நிலக்கோட்டை நால்ரோட்டில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களை வைத்து மறைத்து காரை மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..