திருப்பரங்குன்றம் அருகே வலையன்குளத்தில்சொத்துக்காக ஆள் வைத்து தந்தையை கொலை செய்த மகன் : 3 கைது

தீமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையங்குளத்தில் சொத்துக்காக தந்தையை ஆள் வைத்து கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
வளையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மொட்டையன்(56). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். இவருக்கு முத்துமுனியாண்டி,, முத்துமணி ராஜா, ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மொட்டையன் சனிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார் மொட்டையன் உடலைமீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரனையில், மொட்டையன் கடந்த சில நாள்களுக்கு முன் தனது சொத்துக்களை இளைய மகன் முத்துமணிராஜாவிற்கு எழுதி வைத்துவிட்டாராம். இதனால் கோபமடைந்த மூத்த மகன் ஆள் வைத்து தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வளையங்குளம் பகுதியைச் சேர்ந்த அருள், செல்வம், சிலைமான் எல்.கே.டி நகரைச் சேர்ந்த ராமர் ஆகியோர் மூவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துமுனியாண்டியைத் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image