மதுரையில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து.

மதுரையில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து.தீபாவளி முதல் தொடர்ந்து மூன்று இடங்களில் ஒரே பகுதியில்,தெற்குமாசி வீதி பகுதியில் 3 இடங்களில் தீ பிடித்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே இந்த தீ விபத்து நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மதுரை தெற்கு மாசி வீதியில் பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்து.அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டது தீயணைப்பு படையினர் 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் விரைந்து10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் தண்ணீர் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுஅதிகாலை 4 மணிக்கு பிடித்த தீ 5மணி நேரத்திற்கு போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதுதரைதளத்தில் ஜவுளிக்கடை மற்றும் மேல் மூன்று தளங்களில் ஜவுளி குடோன் என இருந்த 3 மாடி ஜவுளிக்கடை ஜவுளிக் கடை குடோனில் தீயை அணைக்கும் பணி கடும் போராட்டத்துக்கு பின் அணைக்கப்பட்டது.இதில்பல லட்சம் மதிப்பிலான ஜவுளி,ரெடிமேட் ஆடைகள் எரிந்து நாசம் .மதுரை விளக்குத் தூண் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.மதுரை தெற்குமாசி வீதியில் ஜவுளிக்கடைகள் நெருக்கடி மிகுந்த கட்டிடங்களில் இருப்பதால் ஜவுளிக்கடைகள் விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.தொடர்ந்து மூன்று தீ விபத்துகள் நடந்து இருப்பதால் முதல் தீ விபத்து நடந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என விசாரித்து விதிகளை மீறி கட்டியிருந்த கட்டிடங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..