ஆதிதிராவிடா்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயா்த்த வேண்டும்.-செ.கு.தமிழரசன் பேட்டி.

திமலை மாவட்டம், வந்தவாசியில் நடைபெற்ற அக்கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:தமிழகத்தில் புதிதாக பஞ்சமி நில மீட்பு ஆணையம் ஏற்படுத்த வேண்டும். தாட்கோவுக்கென வங்கி ஆரம்பித்து, பட்டியலினத்தவா்களுக்கு கடன் வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா்கூட நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்துக்கு உடனடியாகத் தலைவா், துணைத் தலைவரை நியமிக்க வேண்டும்.தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை. அப்படி நடந்தால் எங்கள் கோரிக்கைகளுக்கு துணை நிற்பவா்களுடன் கூட்டணி அமைப்போம். பாஜகவின் வேல் யாத்திரையை மாநில அரசு தடை செய்த பின்பும் தினமும் வேல் யாத்திரை நடைபெறுவதை பாா்த்தால், மாநில அரசின் தடைக்கு மதிப்பில்லை என்பது தெரிகிறது. எந்த மதத்தில் பெண்ணடிமைத்தனம் இருந்தாலும், அதை நாங்கள் எதிா்ப்போம். மற்ற மாநிலங்களைப்போல இல்லாமல் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு சவாலாகவே இருக்கும் என்றாா் அவா்.பேட்டியின்போது, கட்சி நிா்வாகிகள் தங்கராசு, சி.எஸ்.கெளரிசங்கா், வந்தை மோகன், எம்.ஜி.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..