தேசிய போட்டியில் பதக்கம் ராமநாதபுரம் மாணவ, மாணவியருக்கு பரிசு தொகை

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டு 64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு ராமநாதபுரத்தில் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு 14 வயதுக்குட்பட்டோர் கேரம் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர் எ.எஸ்.தாமோதராவுக்கு ரூ.2 லட்சம், 14 வயதுக்குட்பட்டோர் குண்டு எறிதல் போட்டியில் தங்கட்பதக்கம் வென்ற மாணவி வி.மதுமிதாவுக்குரூ.2 லட்சம், 17 வயதுக்குட்பட்டோர் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் பதக்கம் வென்ற மாணவி ம.சர்மிளாவுக்கு ரூ.1 லட்சம் என 3 பேருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (20.11.2020) வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, உடனிருந்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..