அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா அரசு வழிகாட்டுதல்படி நடந்தது…

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு வருடந்தோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழாவானது கடந்த 15ஆம் தேதி உற்சவர் மூலவர் சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.

இதில் அன்னம், காமதேனு, ஆட்டுக்கிடாய், யானை, குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு ஆனது. மேலும் தினமும் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு லட்சார்ச்சனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா மாலையில் நடந்தது.

இதில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசுரனையும் சம்ஹாரம் செய்த பின்னர், ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மாசூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தினமும் 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. நாளை காலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வழிகாட்டுதல் படி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாச்சாரியார்களும், கோவில் பணியாளர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..