அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி ஆலம்பர்ட் சூத்திரம் கண்டறிந்த டி ஆலம்பர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 16, 1717).

ஜேன்-பாப்டிஸ்ட் லி ராண்ட் டி ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d’Alembert) நவம்பர் 16, 1717ல் பாரிசில் பிறந்தார். தனது கல்வியை ஒரு தனியார் பள்ளியில் பயின்றார். பிறகு கோலி மசாரின் கல்லூரியில் தத்துவம், சட்டம், மற்றும் கலைகள் படித்தார், 1735ல் பாகாலௌரெட்டட் கலைகளில் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் சட்டப் பள்ளியில் பயின்ற பிறகு 1738ல் அட்வகேட் பட்டம் பெற்றார்.டி’ஆலம்பர்ட் தேர்வு விதி, டி’ஆலம்பர்ட் விசை, டி’ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம், டி’ஆலம்பர்ட் சமன்பாடு, டி’ஆலம்பர்ட் செயலி, டி’ஆலம்பர்ட் முரண்பாடு, டி’ஆலம்பர்ட் விதி, டி’ஆலம்பர்ட் முறைமை, டி’ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D’Alembert–Euler condition), டிடிரொட் மற்றும் டி’ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d’Alembert), காஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations), பாய்ம இயக்கவியல் பிரெஞ்சு கலைக்களஞ்சியம்(Encyclopédie), முப்பொருள் புதிர் (Three-body problem) போன்றவை இவரது பெயரிலே வழங்கப்படுகிறது.அரச கழகத்தின் உறுப்பினர் பதவி,பிரெஞ்சு கழக உறுப்பினர் பதவி வகித்தார். கணிதவியல்,எந்திரவியல், இயற்பியல்,தத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய டி ஆலம்பர்ட் அக்டோபர் 29, 1783ல் தனது 90வது அகவையில் பாரிசில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி’ஆலம்பர்ட் சூத்திரம் இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. அலைச் சமன்பாடும் சில இடங்களில் டி’ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.

Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image