Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.11,38,383 வாக்காளர்களில் 2,292 பெண் வாக்காளர்கள் அதிகம்

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.11,38,383 வாக்காளர்களில் 2,292 பெண் வாக்காளர்கள் அதிகம்

by mohan

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (16.11.2020) வெளியிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 14 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 70 ஆயிரத்து 306 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 63 பேர் என 11 லட்சத்து38 ஆயிரத்து 383 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட 2 ஆயிரத்து 292 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 498 ஆண் வாக்காளர்கள், 1 ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 6 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என 2 லட்சத்து 48 ஆயிரத்து517 உள்ளனர். இதில் ஆயிரத்து 508 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.திருவாடானை சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 963 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் என 2 லட்சத்து 84 ஆயிரத்து 417 உள்ளனர். இதில் 469 ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 456 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 378 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் என 3 லட்சத்த 855 உள்ளனர். இதில் ஆயிரத்து 922 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.முதுகுளத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 628 ஆண் வாக்காளர்கள், ஒரு 51 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என 3 லட்சத்து 4 ஆயிரத்து 594 உள்ளனர். இதில் 669 ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, சார் ஆட்சியர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!