குடியாத்தம்- பரதராமி சாலையை ரூ. 20 கோடியில் விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்

குடியாத்தம்- பரதராமி மாநில நெடுஞ்சாலை ரூ. 20 கோடியில்,விரிவுபடுத்தப்பட்டு, செப்பனிடப்படும் என மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கித் தலைவரும், குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலருமான வி. ராமுதெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை விவரம்.குடியாத்தத்திலிருந்து, ஆந்திர மாநில எல்லையான பரதராமி வரை 12 கிமீ நீளமாநில நெடுஞ்சாலை (எஸ்எச்-88) 2020-21 ஆம்ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலைஉள்கட்டமைப்பு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளும்நிலையில் உள்ளதுஇச்சாலை 12 கிமீ நீளத்திற்கு தற்போதுள்ள 7 மீட்டர் அகலத்திலிருந்து 10.50மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காகரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது.சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ளஅகற்ற வேண்டிய மரங்கள் மற்றும்மின்கம்பங்களின் மதிப்பீடுகள் வருவாய் மற்றும் மின்வாரிய *அதிகாரிகளால்தயாரிக்கப்பட்டு வருகிறது.இப்பணிகள் நான்கு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, ரூ. 20 கோடி மதிப்பீட்டில்பணிகள் தொடங்கப்பட உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு வழிகாட்டிநெறிமுறைகளின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவே சாலைப்பணிகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுவதால், சாலையில்உண்டாகும் பள்ளங்களை அந்தந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் உடனுக்குடன்நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர். விரைவில் சாலைப்பணிகள்தொடங்கி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனதெரிவிக்கப்படுகிறது. இச்சாலையை விரிவுபடுத்தி, செப்பனிட நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது.தெரிந்தும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளதுஎன்று அறிக்கையில் கூறியுள்ளார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..