Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை இளைஞருக்கு “கல்வி ரத்னா”..சமூக சேவகர் விருது..

கீழக்கரை இளைஞருக்கு “கல்வி ரத்னா”..சமூக சேவகர் விருது..

by ஆசிரியர்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம், தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமை கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான கல்வி ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு “சமூக சேவகர்” பிரிவில் கீழக்கரை கிளாசிஃபைட் நிறுவனர் SKV.ஷேக் சமூக சேவையே பாராட்டி “நம்பிக்கை நச்சத்திர விருது”  இராமநாதபுரத்தில் கேணிக்ரையில் உள்ள யாஃபா மஹாலில் இன்று (11/11/2020) பாராளுமன்ற உறுப்பினர்  நவாஸ் கனி முன்னிலையில் வழங்கப்பட்டது.

இது சம்பந்தமாக SKV.ஷேக் கூறுகையில், “நான் தற்போது துபாயிலிருக்கும் காரணத்தினால் எனக்கு பதிலாக எனது 

ஆருயிர் நண்பன் எ.எஸ் அசோசியேட்ஸ் இன்ஜினீயர் ஹமீது சுல்தான் அந்த விருதினை பெறுகிறார். என்னை போன்று சமூக சேவகர்களின் சேவையை ஊக்க படுத்தும் வகையில் வழங்கப்படும் இந்த விருது திட்டத்தினை கொண்டு வந்த இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான மரியாதைக்குரிய அண்ணன் கே நவாஸ்கனி அவர்களுக்கு என்னை இந்த விருத்திற்கு பரிந்துரை செய்த நண்பர்களுக்கும் மற்றும் விருது குழுவிற்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் இவர் Kilakkarai Classified என்ற தளத்தின் மூலம் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார், அதற்காக வில் மெடல்ஸ் சாதனை விருது, முகவை ரிகார்ட்ஸ் பெற்றது குறிப்பிடதக்கது.  அதே போல் இவரின் சேவையை பாராட்டும் வண்ணம் Gandhi World Foundation, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்தைவ பணி மற்றும் சமூக பணியில் உள்ள நிறுவனங்கள் இவருக்கு விருது வழங்கி கவுரவித்திருப்பது குறிப்பிடதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!