Home செய்திகள் தமிழகத்தில் முதன் முறையாக தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் முககவசம் அணியாமல் வரும் மக்களை கண்டறிய புதிய மென்பொருள்

தமிழகத்தில் முதன் முறையாக தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் முககவசம் அணியாமல் வரும் மக்களை கண்டறிய புதிய மென்பொருள்

by mohan

மதுரை மாநகர காவல்துறை பண்டிகை காலத்தை எதிர் நோக்கியுள்ள நேரத்தில் பண்டிகை கால பொருட்களை வாங்க வரும் மக்கள் முககவசம் அணியாமல் வருவதை கண்டறிந்து அபராதம் விதிக்க புது வகையான தொழில்நுட்ப யுக்தியை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சிங்ஹா அறிமுகப்படுத்தப்டுத்தி உள்ளார், சோதனை முறையில் முதல் கட்டமாக திலகர்திடல் மற்றும் விளக்குத்தூண் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவிகேமரா நெட்வொர்க்கை பயன்படுத்தி முககவசம் அணியாத அல்லது தவறாக அணிந்துள்ள மக்களை கண்டறிந்து விதி மீறியவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஒர் ஆன்டிராய்டு மொபைல் அப்ளிகேஷன் உதவியுடன் சம்பந்தபட்ட காவல்நிலைய அதிகாரியின் கைபேசிக்கு அனுப்பப்படும், இச்செயல்முறையின் மூலம் விதிமீறியவர்களை ஆதாரத்துடன் சரியான நேரத்தில் கண்டறிந்து அவர்கள் மீது விதிமீறல் வழக்கு பதிய காவல்துறையினருக்கு இம்மென்பொருள் உதவியாக இருக்கும், இந்த மென் பொருளின் உதவியுடன் தற்போதுள்ள சிசிடிவி நெட்வொர்க்கை மேம்படுத்துவதன் மூலம் முககவசம் அணியாதவர்களை கண்காணித்து அவர்களின் புகைப்பட ஆதாரத்துடன் அவர்கள் மீது விதிமீறல் வழக்குகள் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பெங்களுரை சேர்ந்த ADEO distinctions and dimensions 61 மென்பொருள் தனியார் நிறுவனம் முககவசம் விதிமீறலுக்காக இந்த காணொளி பகுப்பாய்வு தீர்வினை கொண்டுவந்துள்ளது, தற்போது இந்த மென் பொருளை உபயோகப்படுத்தி சோதனை அடிப்படையில் 40 CCTV Camera க்கள் பயன்படுத்தப்படவுள்ளது, மதுரை மாநகரின் பிற பகுதிகளுக்கும் குறிப்பாக மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் . குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை மிக விரைவாக கண்டறியவும் இந்த காணொளி பகுப்பாய்வு செயல்முறையை மேம்படுத்த மதுரை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது . இதன் மூலம் மதுரை மாநகர காவல்துறையை தொழில்நுட்ப ரீதியாக வலுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!