Home செய்திகள் மதுரையில் திமுக தலைவர் கொடும்பாவி எரிப்பு:

மதுரையில் திமுக தலைவர் கொடும்பாவி எரிப்பு:

by mohan

மதுரைபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நாளன்று பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் அங்கு பெற்ற திருநீற்றை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியது இந்து மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதற்கு பல தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் முருகன்ஜி சமீபத்தில் 113 இடங்களில் ஸ்டாலினுடைய கொடும்பாவி எரிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டியில் முகஸ்டாலின் கொடும்பாவி எரிக்கப்பட்டது இதையடுத்து காலை 11 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் கதிரவன் மற்றும் இளைஞரணி தலைவர் ரவி தலைமையில் 15 பேர் ஸ்டாலினுடைய உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர் இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதோடு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே உதவி கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஏற்பாட்டை மீறி கொடும்பாவி எரித்தனர் எடுத்த வந்த போலீசார் தீ வைத்து கொடும்பாவி அனைத்து அதை விட்டுச் சென்றனர் கொடும்பாவி எரித்த 15 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!