நிலக்கோட்டை அருகே கன்னிமார் சமுத்திர கண்மாய் வாய்க்கால் தூர்வாரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மருதா நதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது பல்வேறு கண்மாய்கள் நிரப்பப்பட்ட பின்னர் கோம்பை பட்டி கண்மாய்க்கு மருதாநதி கிளையிலிருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு மறுகால் பாய்ந்து அதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை அடுத்துள்ள எம். குரும்பபட்டி கன்னிமார் சமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு சொல்லப்பட்டு தண்ணீர் நிரப்பப்படும்.அவ்வாறு நிரப்பப்படும் மருதாநதி ஆற்று தண்ணீர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சரியாகத் இப்பகுதியிலுள்ள வாய்க்கால்கள் அதிகளவு ஆக்கிரமிப்புகளாலும், சரியாக தூர்வாரப்படாத காரணத்தாலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக கன்னிமார் சமுத்திர கண்மாய் வறண்டு கிடக்கிறது. இந்த கன்னிமார் சமுத்திரக் கண்மாய் நிரப்பப்படுவது தவிர்க்கப்பட்டதால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி நிலத்தடி நீர்மட்டம் 1500 க்கும் கீழே சென்றுவிட்டது. இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த பொது மக்கள் பஞ்சம் பிழைக்க வேறு வழியின்றி வேறு மாவட்டங்களை பிழைப்பு தேடிச் சென்று விட்டார்கள்.எனவே இந்த கன்னிமார் சமுத்ரா கண்மாய் அருகே உள்ள முத்தால புறத்திற்கும், கோம்பைபட்டிக்கும் இடையே அமைந்துள்ள பூச்சாண்டி அம்மன் கோவில் சிறிய அணைக்கட்டு பகுதியிலிருந்து ஒரு கிளை வாய்க்கால் ஏற்படுத்தி கன்னிமார் சமுத்திர கண்மாய்க்கு தண்ணீர் வர அரசு நடவடிக்கை எடுத்தால் ஆண்டுதோறும் கன்னிமார் சமுத்திரகனி நிரம்பிவிடும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சி தலைவருக்கும் , தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய் வறண்டதால் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்து தற்போது மருதாநதி ஒட்டி மழை பெய்து வருவதால் அந்த மழைநீர் வீணாக போகாமல் இருக்க ஏதேனும் வழி வகை செய்து கன்னிமார் சமுத்திர கண்மாய் நிரப்ப வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..