Home செய்திகள் நெல்லையில் பனை விதை நடும் பணி-தன்னார்வலர்கள் பங்கேற்பு…

நெல்லையில் பனை விதை நடும் பணி-தன்னார்வலர்கள் பங்கேற்பு…

by mohan

நெல்லையில் பனைவிதை நடும்பணி நடைபெற்றது. இப்பகுதி தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள்,இயற்கை ஆர்வலர்களால் பனை விதை நடப்பட்டது.நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கன்னிமார்குளம் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலப்பாளையம் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்கம் சார்பாக பொதுமக்களின் பங்களிப்பில் 64 ஏக்கர் கன்னிமார்குளம் தூர்வாரப்பட்டு பருவ மழையை கருத்தில் கொண்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுவரை 275 மரக்கன்றுகள் மற்றும் 150 பனை விதைகள் நடப்பட்டது.எட்டாம் கட்ட பணியாக குளத்தின் கரைகளை பலப்படுத்த பனை விதைகள் நடும் பணி மற்றும் விதை பந்து தூவும் பணி நடைபெற்றது.நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்க தலைவர் அப்துல் முத்தலிப் தலைமை தாங்கினார். மரங்கள் மறுவாழ்வு நாயகன் ஓசை செய்யது பனை விதை நடும் பணிகளை துவக்கி வைத்து அதன் நன்மைகள் குறித்து பேசினார்.நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்க பொருளாளர் காஜா மைதீன் பாதுஷா, ஆலோசகர் குதுபுன் நஜீப் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பக்கீர் முகம்மது, லெப்பை சலீம் தீன்,எஸ்டிபிஐ கட்சி ஊடக அணி பாளை தொகுதி தலைவர் மீரான், பாளை தொகுதி துணைத்தலைவர் மகபூப் ஜான் பசுமை மேலப்பாளையம் தன்னார்வலர்கள் சித்திக் தாரீக் ரஹ்மான் கனி மசூத் உட்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.குளத்தின் அம்பை ரோடு கரை பகுதியில் 100 பனைவிதைகள் பசுமை மேலப்பாளையம் சார்பாக வழங்கப்பட்டு நடப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!