பாரத சாரண- சாரணியர் இயக்க 70வது நிறுவனநாள்

திருவண்ணாமலையில் பாரத சாரண சாரணியர் இயக்க 70வது நிறுவன நாள் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், மாநில செயலாளர் அறிவுறுத்தலின்படி மரம் நடு விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம் தலைமை தாங்கினார் .மாவட்ட கல்வி அலுவலர் வேத பிரகாசம்,மாவட்ட ஆணையர் ரோவர் பகுதியில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாகமாவட்ட அமைப்பு ஆணையர் அருண்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். சாரண இயக்க நிறுவன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு மரக்கன்றுகளின் ஸ்லோகங்கள் மழை பெறுவோம் மரம் வளர்ப்போம்.என்று நடப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஆல்வின் சாமுவேல், மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி, மாவட்ட துணை ஆணையர் ரோவர் சுதாகர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார் சாரணர்கள் ,திரி சாரண மாணவ மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் பின்பக்க ஏரியில் 500 விதைப்பந்து களை தூவினர். மதிய உணவினை லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். விழா ஏற்பாட்டினை திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளருமான பியூலா கரோலின் செய்திருந்தார். நிகழ்வானது சமூக இடைவெளி கடைபிடித்து நடைபெற்றது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..