Home செய்திகள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவுக்காக வங்கி பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்க கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவுக்காக வங்கி பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்க கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைப்பு

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளதுஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்இந்தாண்டு 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை விழா நடைபெற்றதுநினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார்4.5 கோடி மதிப்பிலான தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் விழாவின் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறதுஇந்தாண்டு விழாவுக்காக அக்டோபர் 23 ஆம் தேதி வங்கியில் இருந்து தங்க கவசம் எடுக்கப்பட்டதுவிழா முடிந்தததையடுத்து தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்படைப்புதுணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கியில் தங்க கவசத்தை ஒப்படைத்தார்கள்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!