பாளையங்கால்வாய் கரையில் பனை விதை நடும் பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் 42 கி.மீ. நீளத்துக்கு பாளையங்கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூல 22 வருவாய் கிராமங்களுக்குள்பட்ட 3,500 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாக பயன்பெறுகின்ற கால்வாய் மூலம் நீர்வரத்து பெறும் 57 குளங்களி மூலம் மறைமுகமாக 9,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில வருடங்களுக்கு தூர்வார பட்ட நிலையில் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைகிறது மாவட்ட நிர்வாகத்திற்கு பல கோரிக்கைகள் வைத்தும் கால்வாய் காப்பற்ற ஒரு செயல் திட்ட வடிவு பெற வில்லை முன்னொரு காலத்தில் குடிநீர் ஆதாரமாகவும் நிகழ்ந்த கால்வாய் மீட்க கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் பாதாள சாக்கடையுடன் இணைக்க படவும்,மழைநீர் மட்டுமே செல்லும் ஆறாக மீட்டெடுக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காப்பற்ற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் பாளையங்கால்வாய் சிறப்புகளை இன்றைய இளம் குழந்தைக்களுக்கு எடுத்துரைத்து பனை மரத்தின் நன்மைகளை எடுத்து முதற்கட்டமாக கூறி 250 பனை விதைகள் முஸ்லிம் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆற்று கரையில் இருந்து குறிச்சி ஆற்றுபாலம் வரை பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள், பசுமை மேலப்பாளையம் திட்ட குழு இளைஞர்கள், நீர்நிலை பாதுகாப்பு சங்க நிர்வாகிகள்,மேலப்பாளையம் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது அவர்கள், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், மேலப்பாளையம் நல விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..