மதுரையில் கருடர் பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரில் மூழ்கி முதியவர் பலி

மதுரையில் நேற்று இரவு மழை பெய்தது இதில் மதுரை நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது . மதுரை அண்ணா தோப்பு பகுதியில் உள்ள கருடர் ர்பாலம் நீரில் மூழ்கியது நேற்று இரவு மதுரை ஜவகர் புரத்தை சேர்ந்த சீனி வாசகம் வயது 63 இவர் கோவையில் தன் மகனுடன் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து தன் மகளைப் பார்ப்பதற்காக மதுரை வந்துள்ளார் மற்றொரு மகளை பார்க்க பழங்காநத்தம் சென்றுவிட்டு மீண்டும் ஜவர் புறம் சென்று மீண்டும் கோவை செல்வதற்காக இன்று அதிகாலை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்வதற்காக சைக்கிளில் பாலத்தை கடந்துள்ளார் நேற்று இரவு திடீரென பெய்த மழையினால் கருடர் பாலம் முழுவதும் மூழ்கியது இதை கவனிக்காத சைக்கிளுடன் முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் நீர் முழுவதும் இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகளால் தேங்கியுள்ள நீரை அகற்றம் பொழுது முதியவர் ஒருவர் சைக்கிளுடன் இறந்து கிடந்தது பார்த்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கரிமேடு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal