வெளுத்து வாங்கிய மழை மின்மாற்றி கீழே விழுந்து நொறுங்கியது.

மதுரை நகர் முழுவதும் நேற்று 10.30 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை மதுரை மாநகர் முழுவதும் பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது இந்த நிலையில் மதுரை எஸ் எஸ் காலனி பார்த்தசாரதி தெருவில் மின்மாற்றி ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது நல்வாய்ப்பாக உடனடியாக மின் இணைப்பை துண்டித்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மின்மாற்றி கீழே விழுவதற்கு காரணம் என்ன என அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் தனியார் இன்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட தாகவும் அது மின்மாற்றி அருகே ஒரு பள்ளம் தோண்டி அதை சரியாக மூடாமல் விட்டதே இந்த மின்மாற்றி கீழே விழுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது போன்று அஜாக்கிரதையாக செயல்படும் தனியார் இன்டர்நெட் கேபிள் பதிப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கின்றனர் மேலும் மின்மாற்றி அருகே பள்ளம் தோண்டும்போது முறையாக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற்று பள்ளம் தோண்டினார்கள் எனக் கேள்வி எழுப்பினார்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal