மகள் விபத்தில் பலி தாய் தற்கொலை..

மதுரையில் மகள் விபத்தில் பலியான தால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையம் கம்மா கரை சேர்ந்த ஆதிசிவன் இவரது மனைவி அம்மு என்கின்ற ஜெயராணி இவர்களது மகள் காவியா(11) இப்பகுதியிலுள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாள் சிறுமி காளவாசல் பகுதியில் நின்று கொண்டிருந்த பொழுது லாரி மோதி விட்டு சென்றதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார் இதில் அதிர்ச்சியடைந்த ஜெயராணி திடீரென மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து உடலை கைப்பற்றிய மதுரை மாநகர கரிமேடு காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மகள் விபத்தில் பலியானது மனமுடைந்த தாய் தற்கொலை செய்துகொண்டது மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal