கீழக்கரை காவல்நிலைய புதிய கட்டிடம் திறப்புவிழா காண்பது எப்போது??..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்நிலையம் கடந்த 1987ம் ஆண்டு காவல்நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தநிலையில் அந்த கட்டிடத்தின் மேல் கூரைகள் மற்றும் சுற்று சுவர்கள் இடிந்து விழ தொடங்கியது.இந்நிலையில் தற்காலிகமாக அருகில் உள்ள காவல்துறை குடியிருப்பு பகுதியில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடம் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என காவல்துறையினர் அபோதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பழைய காவல்நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்க்கான ஆணையை பிறப்பித்து, அதற்க்கான நிதியாக 1 கோடியே 2 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த புதிய காவல்நிலைய கட்டிடம் கட்டுவதற்க்காக பூமி பூஜை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கடந்த 17.01.2020 தொடங்கி வைத்தார். இதில் கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கட்டினமானது 8 மாதத்திற்க்குள் நிறைவடையும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் கடந்த 05.10.2020 அன்று கீழக்கரை உட்கோட்ட சரகத்திற்க்குட்பட்ட கீழக்கரை மற்றும் வாலிநோக்கம் ஆகிய இரண்டு காவல்நிலையங்களும் திறக்கப்படுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கீழக்கரை காவல்நிலையத்தில் கணபதி ஹோமம் மட்டும் நடத்தப்பட்டு காவல்நிலையம் பூட்டிய நிலையிலையே உள்ளது.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது காவலர் குடியிருப்பு வளாகத்தில் தற்போது காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சிறியதாகவும், மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. முக்கிய குற்றவாளிகளை இங்கு வைத்து விசாரிப்பது மிகவும் சிரமமாகவும், இது மழைக்காலம் என்பதால் முக்கியமான கோப்புகளை இங்கு பாதுகாப்பாக வைக்க முடியவில்லை மழையில் நனைந்து விடும் என்ற அச்சத்தோடு தான் இருக்கிறோம்.  மேலும் திறப்பது பற்றி மாவட்ட நிர்வாகம் தான் முடிசெய்ய வேண்டும் என்றனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..