திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிந்து கொரான விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் முன்பு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் இலவச முக கவசம் வழங்கி,துண்டு பிரச்சாரம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்தனர்.தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தனிமனிதர் இடைவெளியில் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் முககவசம் அணியாதவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.கொரோனா நோய்த் தொற்று குறித்து திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு செய்யும் விதமாக இலவச முக கவசங்கள் கொடுத்தும், கொரான துண்டு பிரச்சார மூலம் பொதுமக்களுக்கு கொரான குறித்த விழிப்புணர்வு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்