
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று 24.10.2020 நகர செயலாளர் பாசித் இலியாஸ் தலைமையிலும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அற்புதகுமார் மற்றும் நகர் நிர்வாகிகள் முன்னிலையிலும் கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
புகார் மனுவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்MP மீது சமூக வலைதளங்களில் அவதூறை பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த குஷ்பு, கல்யாணராமன், காயத்ரி ரகுராம், ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இன்று (24/10/2020) விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு