வீ.கே.புதூர் தாலுகாவில் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று பயன் பெற ரூ.10- கட்டணமாக செலுத்தி அருகில் உள்ள இ-சேவை மையங்களில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்ட மனு வினை பதிவு செய்யலாம். இத்திட்டத்தின் பயன் பெற மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் இயலாமையின் அளவு 40%க்கு மேலும். அரசுப்பணியில் இல்லாமலும், தனியார், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் நிரந்தரமாக பணிபுரிவோர் மற்றும் சுய தொழில் செய்வோரின் வருமானம் வருடத்திற்கு ரூ.3,00,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.வட்டாட்சியர் அலுவலக சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவின் மூலமும் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலமும் உதவித்தொகை பெறுபவராக இருத்தல் கூடாது. மேற்கண்ட விபரங்களுக்குட்பட்ட வயது வரம்பின்றி அனைத்து மாற்றுத் திறனாளிகளும் உரிய ஆவணங்களுடன் (புகைப்படத்துடன் கூடியமனு, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி புத்தக நகல், தொலைபேசி எண்) விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கிட  மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வீகேபுதூர் தாசில்தார் முருகு செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..