வாலிபர் தற்கொலை உடலை கைப்பற்றி விசாரணை

வாலிபர் தற்கொலை உடலை கைப்பற்றி விசாரணை … மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பசும்பொன் நகர் பைபாஸ் சாலை செல்லும் பாலம் கீழே ஒருவர் இறந்து கிடப்பதாக சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின் மேற்கொண்ட விசாரணையில் இவர் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பர்மா காலனியை சேர்ந்த. முருகேசன் இவரது மகன் கார்த்திகேயன்.35/20 என தெரியவந்தது இவர் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது குழந்தை இல்லை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பைபாஸ் ரோடு பசும்பொன் நகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டுறவு பண்டகசாலை எதிரே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இவர் மது போதையில் படுத்து இருப்பதாக நினைத்து அப்பகுதி மக்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்கள் இந்த நிலையில் இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதற்காக வந்த போது மூச்சு பேச்சு இல்லாத நிலையில் இருந்த அவரை சோதித்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி சுகாதார அதிகாரி மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் இவர் தற்கொலை செய்து காரணம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image