சினிமா வாய்ப்பு குறைந்த நடிகர்களை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது – மாணிக்தாகூர் எம்பி பேட்டி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் உள்ள வலையங்குளம் கிராமத்தில் அடிக்கடி வாகன விபத்தால் உயிர் இழப்பு ஏற்படுவதாகவும் இதனால் சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் இதனடிப்படையில் இப்பகுதியில் மேம்பாலங்கள் அமைப்பது குறித்து விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்தாகூர் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து அதிகாரிகளிடம் பாலத்தின் கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக்தாகூர் எம்பிபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வெற்றி பெற்றால் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குநிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்றதிலிருந்து நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக இந்தியா உருவாகி உள்ளது எனவே நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவின் பிரச்சார பீரங்கியாக செயல்படலாம் என தெரிவித்தார்.தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க அதிகமான முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குமுதலீடு என்பது வேறு வேலைவாய்ப்பு என்பது வேறு தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இங்கு வேலை வாய்பின்மை தலைவிரித்து ஆடுகிறது, முதல்வர் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு என்பது அமைச்சர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டங்கள் ஆகவே உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது என தெரிவித்தார்.தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு செய்தியாளரின் கேள்விக்குபாஜகவின் நம்பிக்கையாக இருக்கலாம் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஏற்கனவே 2011 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது எனவே வரும் தேர்தலில் அதைவிட கூடுதலான வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது என தெரிவித்தார்.தமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி விரைவில் அமையும் என தெரிவித்தார்ரஜினிகாந்த் விரைவில் பாஜகவில் இணைவார் என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறியது குறித்த கேள்விக்குதமிழகத்தில் நடிகர்களை எல்லாம் பிஜேபியில் சேர்த்து வெற்றி பெறலாம் என்று பாஜகவின் கனவு ஒருக்காலும் பலிக்காது வருமான வரித் துறையை கையில் வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் இருக்கும் நடிகர்கள் அனைவரையும் மிரட்டி வருகிறார்கள்.7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்த கவர்னர் காலம் தாழ்த்துவது குறித்த செய்தியாளர் கேள்விக்குஏற்கனவே அமல்படுத்தப்பட்ட சட்ட வடிவை அமல்படுத்தாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருவது வெட்கக்கேடான செயல் ஆளுநர் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார் என மாணிக்தாகூர் எம்பி தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image