சொர்ப்பணந்தல் ஊராட்சியில் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சொர்ப்பணந்தல் ஊராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா பாபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாமலை சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடக்கி வைத்தார். முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்று கருத்தடை செய்து கொண்ட தாய்மார்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இம் முகாமில் உதவி மருத்துவர்கள் சிலம்பரசன், அருள், நாராயணதாஸ், பூபதி வெங்கடேஷ் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மற்றும் கருத்தடை செய்து கொண்ட தாய்மார்களுக்கும் அனைத்து விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டது இவன் இவன் கிராம செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர். முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image