உத்தரபிரதேசத்தில் பழங்குடியின பெண் படுகொலையை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் திருவானைக்கோவில் அருகே ஆக்கிரமிப்பு பெயரில் பள்ளிவாசலை இடித்த சம்பவத்தை கண்டித்தும, உத்தரபிரதேசத்தில் பழங்குடியின பெண் படுகொலையை கண்டித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாநில சட்டத்துறை செயலாளர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் மாலிக் பாஷா, மாவட்ட துணை செயலாளர் அப்ரோஸ் கான் மற்றும் செங்கம் நகர செயலாளர் பர்மானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர். எஸ்.எம்.அன்சர் மில்லத் திறந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய ,மாநில ஏற்பாடுகளை அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சர்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்ராஜ், போத்தராஜா, ஆறுமுகம், பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், மக்கள் புரட்சி கழகம் தலைவர் வர்கீஸ், அம்பேத்கர் தேசியக் கட்சி தலைவர் எல்லப்பன் ஆகியோர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சிகள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் முகமது பைசல் , அமித் கான், ஷாகுல் அமீது, ஹயாத் பாஷா, சாதிக் பாஷா ஆகியோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழக மக்கள் கட்சியின் தானிப்பாடி நகர பொருளாளர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..