சுற்றுசுவர் இல்லாத கால்நடை மருந்தகம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கால்நடை மருந்தக சுற்றுச்சுவர் அமைத்து தரக்கோரி, கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.புகழ்பெற்ற அலங்காநல்லூர் கால்நடை மருந்தகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த கால்நடை மருந்தத்தின் காம்பவுண்டு சுவர் இல்லாததால், இரவில்சமூக விரோதிகள் மது அருந்துவதற்காக உள்ளே நுழைகின்றனராம்.மேலும், கால்நடை மருந்தகமானது பராமரிப்பு பணிகளுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆகவே, அலங்காநல்லூர் கால்நடை மருந்தகத்தில் விரைவில், கால்நடை பராமரிப்புத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க இப் பகுதி கால்நடை வளர்போர் கோரியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image