தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் முதன்முறையாக மதுரையில் இணைய வாயிலாக ஒதுக்கீடு :

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைமுறையிலுள்ள அரசு விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்கள் நேரடியாக கலந்து கொள்வதை தவிர்க்கும் பொருட்டு கணினி மூலம் நடைபெறும் குழுக்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிகள் இணையம் வாயிலாக இன்று மதுரையில் நடைபெற்றது. நேரடி ஒளிபரப்பு மூலம் பார்வையிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணையதளத்தில் விண்ணப்பம் செய்யப்படுவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, மதுரை மாவட்டம் உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர கோட்டத்திற்குட்பட்ட 1121 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கணினி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு முதன் முறையாக மதுரையில் இன்று நடைபெற்றது. உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர செயற்பொறியாளர் இருளப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை கழக இயக்குனர் ஜார்ஜ் வாஷிங்டன் மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் வீட்டு வசதி வாரிய மதுரை கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image