21 கோடியில் அமைக்கப்பட்ட. எய்ம்ஸ் மருத்துவமனை சாலை சிறிதளவு மழைக்கே தாங்கவில்லை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது மருத்துவமனைக்கு செல்வதற்கான பெங்களூரு கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை கூத்தியார்குண்டு இருந்து 6 ,5கிலோமீட்டர் சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டது இந்த சாலை தரமற்ற இருப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.,. நேற்று முன்தினம் மழைநீர் நான்குவழிச் சாலை சந்திப்பு அருகே தேங்கியுள்ளது பள்ளத்தில் வாகனங்கள் சென்று வரும் பொழுது கற்கள் பெயர்ந்து மேலும் பள்ளங்கள் ஆய்கிறது. அருகிலேயே நகரப் பேருந்து நிறுத்தம் இருப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மீது செல்லும் வாகனங்கள் தேங்கியுள்ள நீரை சேறும் சகதியும் அவர்கள் மீது அடித்து செல்வதாலும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் 21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே மாதத்தில் கற்கள் பெயர்ந்து வந்துள்ளது தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image