கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA-வின் சார்பாக நகராட்சி ஆணையர் மற்றும் மின் நிலைய உதவி பொறியாளரிடம் மனு..

கீழக்கரை  வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA-வின் சார்பாக இரண்டு கோரிக்கை மனு கீழக்கரை நகராட்சி பொறியாளர் மற்றும் கீழக்கரை மின் நிலைய உதவி பொறியாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கீழக்கரை நகராட்சி பொறியாளரிடம், வடக்குத்தெரு மணல்மேட்டிற்கு அருகில் உள்ள சங்குமால் சாலையில் புதிய சாலை அமைக்கவும், வடக்குத்தெரு C.S.I தேவாலயம் முதல் யூசுப் சுலைஹா மருத்துவமணை வரை உள்ள சாலையில் சில வாரங்களுக்கு முன் கழிவுநீர் செல்வதற்கான குழி தோண்டப்பட்டு அந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த இரு சாலையையும் சீரமைப்பதற்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கீழக்கரை மின் நிலைய உதவி பொறியாளரிடம் வடக்குத் தெரு மணல்மேட்டிற்கு அருகில் உள்ள சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்வற்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal