திருவாடானை சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேர தீவிர விசாரணயில், கணக்கில் வராத ரொக்கம் ரூ.13,595 பறிமுதல் செய்து சார்பதிவாளர் மாலதி, உதவியாளர் ராஜகண்ணன், இடைத்தரகர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.