எந்த கட்சியையும் சாராதவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்குதல் மற்றும் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு மகரிஷி கல்வி குழும தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுத அருணாசலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை நிலைய பேச்சாளர் வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்று பேசினார. ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் படிவத்தை கட்சி நிர்வாகிகள் வழங்கினார். மாவட்ட செயலாளர் பேசுகையில், இந்தப் படிவத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் குறிப்பாக அதிமுக கட்சியினர் மகள் மகன்களை சேர்க்கக்கூடாது மாற்று கட்சியினர் அல்லது எந்த கட்சியையும் சாராதவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கடமைக்காக பெயர் எழுத வேண்டாம். முழு ஆர்வத்துடன் இந்த பணியை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பின்னர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சிலர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கணேசன், பேரவை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் குமார், முன்னாள் தலைவர் சங்கர், முன்னாள் நகர செயலாளர் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் தலைவர் பத்மா முனிகண்ணு, ஆர்.கே.சரவணன் உட்பட பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image