சமூக நலத்துறை சார்பில்ஆளுமை மேம்பாடு இணையவழி பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தலின்படி , மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பாரத சாரணர் இயக்கம் , தேசிய மாணவர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான வளரிளம் பருவத்தினரின் உரிமைகள் மற்றும் ஆளுமை மேம்பாடு இணையவழி பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை தாங்கினார்.மகிளா சக்தி கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், குழந்தை உரிமைக்கான தூதர் நந்தினி ஜெயபாரதி, மகிளா சக்தி கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு,குழந்தை திருமண ஒழிப்பு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்ஆகியோர் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினார். 40 சாரணர் சாரணிய ஆசிரியர்கள்,15 ரோவர் ரேஞ்சர்ஸ். 15 தேசிய மானவர்ப்படை 10 மாணவர்கள். 10 நல ஒருங்கிணைப்பாளர் என 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். போளூர் கல்வி மாவட்டம் செங்கம் கல்வி மாவட்டம் திருவண்ணாமலை கல்வி மாவட்டம், ஆரணி கல்வி மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டம் அனைத்து பகுதியில் இருந்து பங்கேற்று பயன் பெற்றனர். போளூர் கல்வி மாவட்ட பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் தட்சிணாமூர்த்தி, செங்கம் கல்வி மாவட்ட பாரத சாரண இயக்க மாவட்ட செயலர் வெங்கடேஷ் , சாரணர் இயக்க பொறுப்பாளர்கள் அருண்குமார், கலைவாணி, பாலகுமார், ரமேஷ், தேசிய மாணவர் படை மாவட்ட அலுவலர் விஜயானந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் , தேசிய பயிற்றுனர்மான பியூலா கரோலின் செய்திருந்தார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..