Home செய்திகள் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குழாய் உடைப்பு கசியும் தண்ணீரைப் பயன்படுத்தும் அவல நிலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் 42 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை திட்டம் ரயில்வே மேம்பாலம் என சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளின் போது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஆகிறது குறிப்பாக வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில் தற்போது குழாய் உடைப்பு ஏற்படுவதால் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது குறிப்பாக மலையடிப்பட்டி பகுதியில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் குழாய் உடைப்பில் கசியும் குடிநீரை மண்ணில் குழி தோண்டி குடங்களில் நிரப்பி வீட்டுக்கு எடுத்துச் சென்று சமையலுக்கம் குடிப்பதர்க்கும் பயபடுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இப்பகுதியில் உப்புத்தண்ணீர் 5 ரூபாய்க்கும் நல்ல தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நகராட்சி நிர்வாகம் பொது மக்களின் அவல நிலையை கவனத்தில் கொண்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் உடைய கோரிக்கை .

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!