பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மதுரை மாவட்ட அனைவரும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விழிப்புணர்வில் முக்கியமாக அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வீட்டில் உள்ள அனைவரையும் முககவசம் அணிய அறிவுறுத்த வேண்டும், அனைவரும் வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போது கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், பணி செய்யும் இடங்களில் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.மேலும் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமெனவும், மெதுவாக செல்ல வேண்டுமெனவும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


செய்தியாளர் வி காளமேகம் மதுரை மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..