நெல்லையில் நோய் வாய்ப்பட்ட நிலையில் சுற்றி வந்த பெண் யானை உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை…

கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள பொட்டல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சுற்றி வந்த பெண் யானை இறந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள பொட்டல் மலை அடிவாரத்தில் 80 அடி கால்வாய் அருகில் பெண் யானை ஒன்று கடந்த ஒரு வார காலமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் உள்ள முத்துக்குட்டி என்பவருடைய விளைநிலத்தில் அந்த பெண் யானை இறந்து கிடந்தது.இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஓம்கார கொம்பு மற்றும் அம்பாசமுத்திரம் வனச்சரகர் (பொறுப்பு) சரவணகுமார், பாபநாசம் வனச்சரகர் பரத், கால்நடை மருத்துவர் மனோகரன், ஆகியோர் இறந்த பெண் யானையை பார்வையிட்டு நோய்வாய்ப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.பின்னர் இறந்த பெண் யானையை டிராக்டர் மூலம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..