கொரோனா ஊரடங்கு மீறி பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம் – மாணவர்களை கட்டாயபடுத்துவதாக குற்றச்சாட்டு.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகத நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான பராமரிப்பு பணிகளை சில பள்ளி நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடகூடாது என்ற அடிப்படையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களை பள்ளிக்கு கட்டாயம் வர கூறி தொலைபேசி மூலமாக கட்டாயபடுத்துவதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக மதுரையில் இது போன்ற தனியார் பள்ளிகள் கொரோனா கால கட்டத்தில் திறந்திருப்பதும் அதற்கான ஆதார வீடியோக்கள் வெளியாவதும் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..